புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூபாய் 500 குறைகிறது; முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

புதுச்சேரியில் சிகப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.500ம் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.350 சிலிண்டர் விலை குறைகிறது.

”சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு 200 ரூபாய் குறைக்கப்படும் என்கின்ற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரியில் மாநில அரசின் சார்பில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300 மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150 மானியம் இந்த மாதம் முதல் வழங்கி வந்த நிலையில் கூடுதலாக 200 ரூபாய் விலை குறைப்பு புதுச்சேரி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

இதன் மூலம் புதுச்சேரியில் சிகப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.500 ம் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.350 சிலிண்டர் விலை குறைகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com