தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி,
நேற்று பிப்ரவரி 19-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சென்னையில் வாக்குப்பதிவு குறைவு... வழக்கமானதா? கவலைக்குரியதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
நிச்சயமாக கவலைக்குரிய விடயமாகும், பெருவாரியான மக்கள் வாக்காளர்கள் வாக்களிக்கத் தவறியுள்ளனர். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்று தான் கருத இயலும். இது தான் அசல் (மறைமுக) NOTA வாக்குகள்!!
பிழைப்பு நகரமாகி போன சென்னையில் ஓடவே நேரம் சரியா இருக்கு,ஓட்டு போட எங்க சார் டைம் இருக்கு???
நம் மக்களின் அலட்சியமே கவலைக்குரியது
Fb farook nagore:
போரில் வாள் மூலம் ஆட்சியை பிடித்த காலம் போய்; தேர்தலில் தாள் மூலம் ஆட்சியை பிடிக்கும் காலத்திற்கு வந்துவிட்டோம்..! இந்த போரில் மக்களுக்கு அச்சம் இல்லை; அலட்சியமே உள்ளது..!
கவலைக்குரியது. ஜனநாயக நாட்டில் நம்முடைய ஜனநாயக கடமையாற்றவில்லையென்றால் எப்படி. சுரண்டுபவரை எல்லாம் நாம் துரத்தி அடிக்கவேண்டும்.
இதையும் படிக்கலாமே... காங்கிரஸில உள்ள கோபத்தை நேருமேல காட்டுறது சரியில்லை-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike