ராமநாதபுரம்: மணல் மாஃபியாக்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் - போலீசார் எச்சரிக்கை.!

ராமநாதபுரம்: மணல் மாஃபியாக்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் - போலீசார் எச்சரிக்கை.!
ராமநாதபுரம்: மணல் மாஃபியாக்கள் மீது கடும்  நடவடிக்கை பாயும் - போலீசார் எச்சரிக்கை.!
Published on

மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


இராமநாதபுரம் மாவட்டத்தில் மணல், மண் மற்றும் கனிம வளங்களை திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 379 மற்றும் சுரங்கங்கள், கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாட்டு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சார்பில் காவல்துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ள 94899 19722 என்ற கைபேசி எண்ணிற்கு வாட்ஸ்-ஆப், குறுஞ்செய்தி அனுப்பியோ, அல்லது போனில் அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், 170 வது சட்டபிரிவின் படி மணல் திருட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com