பாரதிய ஜனதா சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
ராம்நாத்துக்கு பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அல்லாமல், அ.தி.மு.க.வின் இரு அணிகள், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தேர்தல் நடைபெற்றால் பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ராம்நாத் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
ராம்நாத் கோவிந்த்திற்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான 17 கட்சிகளின் சார்பில் மீரா குமார் குடியரசுத்தலைவர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.