ஐபிஎல்: முதலிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல்: முதலிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல்: முதலிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்
Published on

ஐபிஎல் தொடரில், ஆறாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

புனேவில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். நடப்பு தொடரில் அதிரடியாக விளையாடி வரும் ஜோஸ் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி தடுமாறியது. பின்ச் ஹிட்டராக அனுப்பப்பட்ட அஷ்வினும் சோபிக்கவில்லை. சற்றே அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ரன்களில் வெளியேறினார். அதேநேரத்தில் இளம் வீரர் ரியான் பராக் 31 பந்துகளில் 56 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது.



இதையடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, இம்முறை தொடக்க வீரராக களம் கண்டபோதும், சோபிக்கவில்லை. 10 பந்துகளை சந்தித்த அவர் 9 ரன்களில் வெளியேறினார். ஏழாவது ஓவரை வீசிய மத்தியப்பிரதேச இளம் புயல் குல்தீப் சென், கேப்டன் டூ பிளஸ்ஸி, மேக்ஸ்வேல் ஆகியோரை வெளியேற்ற பெங்களூருவின் சரிவு தொடங்கியது. நடப்பு தொடரில் சிறந்த பினிஷராக அறியப்பட்ட தினேஷ் கார்த்தி 6 ரன்களில் ரன் அவுட் ஆக, பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 29 ரன்களில் தோல்வியடைந்தது. அரைசதம் விளாசியதோடு 3 கேட்ச் செய்த ரியான் பராக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com