ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் - சமாதான முயற்சியில் தலைவர்கள்..!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் - சமாதான முயற்சியில் தலைவர்கள்..!
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் - சமாதான முயற்சியில் தலைவர்கள்..!
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்ய சமாதான முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.


முதலமைச்சர் அசோக் கெலோட்டுடன் அதிருப்தியில் உள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். இதையடுத்து சச்சின் பைலட் டெல்லியிலிருந்து ராஜஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஜெய்ப்பூரில் வைத்து அசோக் கெலோட் மற்றும் சச்சின் பைலட் இடையே சமாதானம் பேச கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களும் ராஜஸ்தான் விரைகின்றனர்.


முன்னதாக கெலோட் அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா முயல்வதாகவும் ஆனால் தங்கள் எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக உள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்தார். மாநில அரசை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறி அம்மாநில காவல்துறை இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் அவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக சுமார் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சில சுயேச்சை எம்எல்ஏக்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு முதல்வர் அசோக் கெலோட் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com