ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
Published on

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கொல்கத்தா உட்பட 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com