கேரளாவில் இருந்து போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?

கேரளாவில் இருந்து போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?
கேரளாவில் இருந்து போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?
Published on

நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலத்திலிருந்து போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்தான் ராகுல் காந்தி முதன்முதலாக அரசியலில் நுழைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்றார். அதன்பிறகு, 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் ராகுல் வெற்றி பெற்று வந்துள்ளார். அமேதி தொகுதியில் அவரது தந்தை ராஜீவ் காந்தி தொடர்ந்து 4 முறை எம்.பி ஆக இருந்துள்ளார். 

இந்நிலையில், 2019 தேர்தலிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், சோனியா ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர். காங்கிரஸ் கட்சி அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் ராகுல், சோனியா தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ரானி மீண்டும் களம் காண்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி கூடுதலாக போட்டியிட வாய்ப்புள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதேபோல், கர்நாடகாவில் போட்டியிட வேண்டுமென்று கர்நாடக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதப்பட்டது. குறிப்பாக பெங்களூர் நகரின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி மேலும் கர்நாடகாவில் வலுவடையும் என்று கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடில் போட்டியிட அழைப்பு விடுத்துள்ளதாக என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முல்லப்பள்ளி ராமசந்திரன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சன்னிதாலா ஆகியோர் கலந்து கொண்ட வேட்பாளர்கள் தேர்வு கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி தரப்பினும் எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை. 

“ராகுல் காந்தி போட்டியிடுவது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் ராகுல் காந்தி ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்” என்று முல்லப்பள்ளி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஷானவாஸ் வெற்றி பெற்றார். அவர் 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

ஆகிய மொத்தம் கர்நாடகாவில் மைசூரு, மத்திய பெங்களூரு, பிதார், தமிழ்நாட்டில் சிவகங்கை, கன்னியாகுமரி, கேரளாவின் வயநாடு ஆகிய 6 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் மாநிலத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com