உண்மையில் ராகுல் காந்தி எதில் கையெழுத்திட்டார்?: சோம்நாத் கோவில் நிர்வாகம் விளக்கம்

உண்மையில் ராகுல் காந்தி எதில் கையெழுத்திட்டார்?: சோம்நாத் கோவில் நிர்வாகம் விளக்கம்
உண்மையில் ராகுல் காந்தி எதில் கையெழுத்திட்டார்?: சோம்நாத் கோவில் நிர்வாகம் விளக்கம்
Published on

இந்து அல்லாதவர் வருகைப் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக எழுந்த சர்ச்சைக்கு சோம்நாத் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு நேற்று சென்ற ராகுல் காந்தி, இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் கையெழுத்து இட்டதை குறிக்கும் விதத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாஜகவினரால் இந்தப் புகைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாஜகவின் குஜராத் மாநிலத் தலைவர் ராஜு தருவ் இதுகுறித்து கூறும்போது, “ராகுல் காந்தி தொடர்ச்சியாக கோயில்களுக்கு செல்கிறார். காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்கிறது. கோயில் வருகைப் பதிவேட்டில் அவர் இந்து இல்லை என குறிப்பிட்டு உள்ளார்” என்றார்.

பாஜவினரின் விமர்சனத்திற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, கோவிலில் ஒரே ஒரு வருகைப் பதிவேடு மட்டும்தான் இருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வெளியாகியுள்ள கையெழுத்து ராகுல் காந்தியுடையது அல்ல என்றும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள விண்ணப்ப நகலும் கோயிலில் வழங்கப்பட்டது கிடையாது என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சோம்நாத் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்து அல்லாதோர் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை என்றும், பார்வையாளர்கள் பதிவேட்டில்தான் அவர் கையெழுத்திட்டார் என்றும் கோவில் நிர்வாகி லாஹரி கூறியுள்ளார். மேலும், இதுஒரு உற்சாகமூட்டும் இடம் என்று பதிவேட்டில் ராகுல் காந்தி எழுதினார் என்றும், அப்பொழுது தங்கள் பொது மேலாளர் உடன் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய லாஹர், “பாதுகாப்பு கருதி இந்து அல்லாதோர் தனித்த பதிவேட்டை கடந்த 3 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். ஆனால் ராகுல் காந்தி அதில் கையெழுத்திடவில்லை. ஒருவேளை அவரது ஊடக ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டிருக்கலாம். அதுவும் எனக்கு உறுதியாக தெரியாது. இந்து அல்லாதோர் பதிவேடு பாதுகாவலரிடம்தான் இருக்கும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com