பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் பதற்றமாக இருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றிருக்கும் நிலையில் அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து கூறியிருக்கிறார்.
பிரதமரின் சீன நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அதில் மோடி பதற்றத்துடன் இருப்பதாகவும் ராகுல்
தெரிவித்துள்ளார். இது மிக விரைவாக இரண்டு விஷயங்களை தங்களுக்கு நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
டோக்லாம் மற்றும் சீனா - பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதாகவும், அந்த
பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றும் ராகுல் கூறியுள்ளார். இதுகுறித்து சீன பிரதமருடன் பேச வேண்டும் என்று இந்திய மக்கள்
எதிர்பார்ப்பதாகவும், அதற்கு எங்களின் ஆதரவு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.