‘ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்’ - ராகுல் அதிரடி

‘ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்’ - ராகுல் அதிரடி
‘ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்’  - ராகுல் அதிரடி
Published on

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை உத்தரவாதம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், “காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க முடிவினை எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், குறைந்தபட்ச வருமானத்தை எல்லா ஏழைகளுக்கும் உறுதி செய்யும். அதாவது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள். இதனால், பசி, வறுமை எதுவும் இந்தியாவில் இருக்காது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்த திட்டத்தை சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டத்தை நிறுவேற்றுவோம். நாங்கள் இரண்டு வேறுபட்ட இந்தியாவை விரும்பவில்லை. ஒரே ஒரு இந்தியா மட்டும் இருக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.

மேலும் இதுதொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “நம்முடைய லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் வறுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் நம்மால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்களை ஆட்சியில் அமர்த்தினால், நாட்டில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கும். இது வறுமை, பசியை ஒழிக்கும். இது எங்களுடைய திட்டம், எங்களுடைய வாக்குறுதி” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com