தேர்தல் விதிமீறல் தொடர்பான புகாரில் விளக்கம் அளிப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கால அவகாசம் கோரியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பழங்குடியினரை சுட்டுக் கொல்லும் வகையில் மோடி அரசு புதிய சட்டம் இயற்றியதாக குற்றம்சாட்டியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுகுறித்து பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், 2 நாட்களில் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ராகுக் காந்தி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க மே 7 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் அவகாசம் வழங்குமாறு ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.