வாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா? - ராகுல் காந்தி பதில்

வாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா? - ராகுல் காந்தி பதில்
வாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா? -  ராகுல் காந்தி பதில்
Published on

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களம் இறங்குவாரா என்‌ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி போட்டியிடுவதால் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி இந்தப் பொதுத் தேர்தலில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இங்கு அடுத்த மாதம் 19ம் தேதி இறுதிக்கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் இ‌த்தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற ‌கே‌ள்வி எழுந்துள்ளது. மோடியை எதிர்த்து பிரியங்கா நிறுத்தப்படுவாரா என்‌ற கேள்விக்கு‌ பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ பதில் அளிக்கப் போவதில்லை என்றும் இதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கவே விரும்புகிறேன் என்றும் அவர்கூறினார்.


 
முன்னதாக  “உங்கள் அம்மா சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி‌ தொகுதியில் போட்டியிடுவீர்‌களா?” எனக் கட்சித் தொண்டர் ஒருவர் பிரிய‌ங்காவிடம் கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் ப‌திலளித்த பிரியங்கா, ஏன் வாரணாசியி‌ல் நான் போட்டியிடக் கூடாதா? என்று பதில் கேள்வி எழுப்பினார். தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கட்சித் தலைமை விரும்பினால் அதற்கு ‌தான் தயார் என்றும்‌ பிரியங்கா கூறியிருந்தார். 

வாரணாசி தொகுதியில் பிரியங்கா களமிறங்கினால் பிரதமர் மோடிக்கு கடும் சவாலாக இருப்பார் என ராபர்ட் வதேராவும் கூறியுள்ளார்‌. ராகு‌ல் காந்தியும் ராபர்ட் வதேராவும் தெரிவித்த கருத்துக்கள் ஒருபுறம் உள்ள நிலையில் பிரியங்கா காந்தி நேரடியாகவே வாரணாசிக்கு சென்று பரப்புரையும் மேற்கொ‌ண்டிருந்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ‌வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறங்குவார் என்ற ஊகத்திற்கு வலுசேர்த்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com