"வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" பிரதமர் மோடி

"வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" பிரதமர் மோடி
"வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" பிரதமர் மோடி
Published on

ஊழல் அரசியல் மற்றும் வாரிசு அ‌ரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தேனி ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். அப்போது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறி, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.

நாளை நமதே , நாற்பதும் நமதே என்று என்று கூறிய அவர், காங்கிரசும், திமுகவும் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாகத் தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவினர் சிறையில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியை அவர்கள் விமர்ச்சித்தனர் என்றும், தற்போது, கடந்த கால கசப்புகளை மறந்து, ஊழல்களை ஆதரிக்கவும், தன்னை எதிர்க்கவும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என நரேந்திர மோடி கூறினார்.

தந்தை ஆட்சியில் இருந்தபோது, அவரது மகன் பணத்தை கொள்ளையடித்ததாக கார்த்தி சிதம்பரத்தை மறைமுகமாக சாடினார். தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்க விரும்புவதாக கூறிய மோடி, காங்கிரசும், திமுகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை அந்தக் கூட்டணியில் உள்ளவர்களே ஏற்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com