பி.டி.எஸ்.டி(Post-traumatic stress disorder) அல்லது அதீத மன உளைச்சல் டிஸார்டர் என்பது ஏதேனும் அதிர்ச்சிகரமான செய்தியை கேட்பதால் அல்லது அனுபவிப்பதால் மனநிலையில் உண்டாகும் மோசமான மாற்றம். ஃப்ளாஸ்பேக், கனவு மற்றும் அதிகமான கவலை, அத்துடன் அது தொடர்பாக என்ன நடக்குமோ என்று அளவுக்கதிகமாக யோசித்து, கட்டுபாடற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல் போன்றவை மனநிலையை மோசமான அதிர்வுகளை உண்டாக்கும்.
அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை சந்திக்கும் பலருக்கும் தற்காலிகமாக சரிசெய்தல் மற்றும் தற்காலிமாக சமாளித்தல் என்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் காலம் செல்லசெல்ல, தன்னை தானே பாதுகாத்துக் கொள்வதன்மூலம் அவர்கள் மேம்படுவார்கள். அறிகுறிகள் மோசமாக இருப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிவர பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். அன்றாட செயல்பாடுகளால்கூட சில பிடிஎஸ்டி பிரச்னை இருக்கலாம்.
அறிகுறிகள்
அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் பிடிஎஸ்டி-க்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கலாம். ஆனால், சில நேரங்களில் சம்பவம் நடந்த பல ஆண்டுகள்வரை கூட அறிகுறிகள் எதுவும் தெரியாது. இவை வெளிப்படும்போது சமூக அல்லது வேலை சூழலில், குடும்ப உறவுகளில் குறிப்பிடத்தக்க சிக்கல்களை உருவாக்குகின்றன. தினசரி வேலையை செய்வதிலும் இவை இடையூறுகளை உண்டாக்கும்.
இதன் அறிகுறிகளை ஊடுருவும் நினைவுகள், தவிர்ப்புகள், மனநிலையில் எதிர்மறையான மாற்றங்கள் மற்றும் உடல், உணர்ச்சிகளில் எதிர்விளைவுகள் என நான்காகப் பிரிக்கலாம். காலப்போக்கில் அறிகுறிகள் மாறுபடலாம் அல்லது நபருக்கு நபர்கூட மாறுபடும்.
ஊடுருவும் நினைவுகள்
தவிர்ப்புகள்
மனநிலையில் எதிர்மறையான மாற்றங்கள்
உடல், உணர்ச்சிகளில் எதிர்விளைவுகள்
பொதுவாக இவை காலப்போக்கில் சரியாகும். உதாரணத்திற்கு, கார் விபத்து அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகளைப் படிக்கும்போது தங்களுக்கு நடந்த நிகழ்வுகள் ஞாபகத்தில் வரும். ஒரு மாதத்திற்கும் மேல் அதே நிலையில் இருந்தால், நினைவுகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதாக உணரும்போது மருத்துவர் அல்லது மனநல நிபுணரை அணுகுவது நல்லது. இவை நிலைமை மோசமடைவதைத் தடுக்கும்.
சிலருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நினைவில் வரும்போது, சில நபர்களை எதிர்கொள்ளும்போது அவர்களை கொலை செய்யவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பது போன்ற நினைவுகள் மேலோங்கும். அவர்கள் உடனே மனநல மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
காரணங்கள்
தடுப்பது எப்படி?
பயம், கோபம், பதட்டம், மனச்சோர்வு, குற்ற உணர்வு இவையனைத்துமே பிடிஎஸ்டி-யின் எதிர்விளைவுகள். சாதாரண மன அழுத்த நிலையிலிருக்கும்போதே தேவையான உதவி மற்றும் ஆதரவைப் பெறுவது மோசமான விளைவுகளைத் தடுக்கும்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம்விட்டு பேசலாம். எண்ணங்களை திசைதிருப்பலாம்.
மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
நெருங்கியவர்கள் கொடுக்கும் அரவணைப்பு, ஆல்கஹால் அல்லது மற்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும்.