தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி
Published on

அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, “எழும்பூர், விருகம்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், செய்யூர்(தனி), கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர், பென்னாகரம், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, மேட்டூர், சேலம் மேற்கு, நாமக்கல், குமாரப்பாளையம், பெருந்துறை, பவானிசாகர், கூடலூர்,அவினாசி, திருப்பூர் வடக்கு,வால்பாறை, ஒட்டன்சத்திரம், மதுராந்தகம், கேவி குப்பம், ஊத்தங்கரை, வேப்பன்ன ஹள்ளி, பாலக்கோடு, விருதாச்சலம், பன்ரூட்டி, கடலூர், கீழ்வேளூர்(தனி), பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான், மதுரை மேற்கு, அருப்புக்கோட்டை, பரமக்குடி, தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், ராதாபுரம், குளச்சல், விளவங்கோடு, நிலக்கோட்டை(தனி), கிருஷ்ணராயபுரம்(தனி), கரூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர்(தனி), திட்டக்குடி(தனி)” ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2011-ல் அதிமுக கூட்டணியில் வென்ற 29 இடங்களில் 12 இடங்களை தேமுதிகவுக்கு அமமுக ஒதுக்கியுள்ளது. இதன்படி விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். தேமுதிக துணைச் செயலாளர் பார்த்த சாரதி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சேலம் மேற்கு தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், பல்லாவரத்தில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com