ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தியவர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில், வாலாஜா சாலையே போராட்டக்களமாக மாறியது தமிழக மக்களின் உணர்வுகளை எந்தளவிற்கு மத்திய, மாநில அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோரைக் கைது செய்து, காவிரி போராட்டத்தை திசை திருப்ப காவல்துறையை அரசு பயன்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி பிரச்னையை விட கிரிக்கெட் போட்டியை நடத்துவது முக்கியமாகி விட்டது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்ற சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.