பழனியில் தலையில் காயம்பட்டு சிகிச்சை மறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அண்ணன் என பேசி சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்த ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
பழனி பேருந்து நிலையத்தில் பெண்கள் மீது தொடர்ந்து மர்மப் பெண் ஒருவர் தாக்குதல் நடத்துவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணை துரத்தி பிடித்தனர். விசாரணை செய்ததில் அப்பெண் மனநல பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வெளி ஊரிலிருந்து கொண்டுவந்து பழனியில் சிலர் விட்டு சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தலையில் காயம்பட்டு இருந்த அப்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் அழைத்தனர். ஆனால் அப்பெண் வர மறுத்தார். இதையடுத்து அப்பெண்ணிடம் பேசிய பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில், “அண்ணன் கூப்பிடுகிறேன் வா” அழைத்தார். அவரது பேச்சைக்கேட்டு அப்பெண் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். ஆய்வாளரின் அன்புச் செயலுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.