இந்திராகாந்தி கொலைக்கு பின் அரசியலில் வன்முறையும் ஒரு அங்கமாகிவிட்டது - பிரதமர் மோடி

இந்திராகாந்தி கொலைக்கு பின் அரசியலில் வன்முறையும் ஒரு அங்கமாகிவிட்டது - பிரதமர் மோடி
இந்திராகாந்தி கொலைக்கு பின் அரசியலில் வன்முறையும் ஒரு அங்கமாகிவிட்டது - பிரதமர் மோடி
Published on

1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகுதான் அரசியலில் வன்முறை என்பது ஒரு அங்கமாக இடம்பெற்றுவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனை சுட்டிக் காட்டியே பிரதமர் மோடி பேசியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பா.ஜ.க. நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் கலந்துரையாடிய அவர், எப்பொழுது ஒருவன் உண்மையை பேசுவதற்கோ அல்லது ஏற்றுக்கொள்வதற்கோ மறுக்கிறானோ, அப்போது அவன் அரசியல் வன்முறையில் ஈடுபடுகிறான் என்று தெரிவித்தார். திரிபுரா, சிக்கிம், கர்நாடாக மாநிலங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும், வன்முறைகள் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com