பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனுதாக்கலின் போது பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி மத்திய் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலரும் உனடிருந்தனர். தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்றார்.
வேட்புமனுதாக்கலுக்கு முன்பாக தன்னுடைய தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, ‘நான் வெற்றி பெறுகிறனோ இல்லையோ ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். பிரதமர் பதவி என்பது வேடிக்கையானது அல்ல. ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கானது மட்டும் அல்ல. அது, 130 கோடிமக்களுக்கானது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக வாரணாசியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.