கடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்?

கடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்?
கடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்?
Published on

ஏழாவது மற்றும் கடைசிக்கட்ட மக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து 2வது முறையாக களமிற‌ங்க உள்ளார். பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடும் நிலையில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். கடந்த முறை இதே தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்ற சத்ருகன் சின்ஹா பின்னர் காங்கிரசுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. 

மத்திய மின் துணை இணையமைச்சர் ஆர்.கே.சிங் பீகார் மாநிலம் அர்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் காஸிபூர் தொகுதியில் ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய வீட்டு வசதித் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் நகரமான அமிர்தசரசில் களமிறங்கியுள்ளார். 

(சன்னி தியோல்)

மக்களவை முன்னாள் சபாநாயகரும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் புதல்வியுமான மீரா குமார், சசாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும் அவரது அரசியல் வாரிசாக கருதப்படுபவருமான அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். 32 வயதான இவருக்கு நடப்பு மக்களவையின் மிக இளைய உறுப்‌பினர் என்ற பெருமையும் உண்டு. 

(ரவி கிஷன்)

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பிரபல போஜ்புரி நடிகர் ரவி கிஷண், பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் இத்தொகுதியில் 5 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் களம் காண்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com