அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், அமைச்சர்கள் அன்பழகன், சி.வி.சண்முகம், காமராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனிடையே அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் ஈபிஎஸ் தரப்பில் 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும் இடம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, தங்கமணி, வேலுமணி ஆயோரும், ஓபிஎஸ் தரப்பில் பண்ருட்டி ராமசந்திரன், ஜே.சி.டி. பிரபாகர், சுப்புரத்தினம், தேனி கணேசன், பாலகங்கா ஆகியோரும் இடம் பெறக்கூடும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.