பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடவுள்ளார்.
கட்சியின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிகாரப்பூர்வமான வேட்பாளர் என்ற அறிவிப்பினை வெளியிடுவதாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளையும் முழுமையாக தீர்ப்பேன் என்று உறுதியளித்தார்.இதன்பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாரிவேந்தர் வாழ்த்து பெற்றார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுகவின் உதயச்சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.