பாலமேடு பேரூராட்சி: ஆதிக்கம் செலுத்தும் சுயேச்சைகள் - பின்தங்கிய பிரதான கட்சிகள்

பாலமேடு பேரூராட்சி: ஆதிக்கம் செலுத்தும் சுயேச்சைகள் - பின்தங்கிய பிரதான கட்சிகள்
பாலமேடு பேரூராட்சி: ஆதிக்கம் செலுத்தும் சுயேச்சைகள் - பின்தங்கிய பிரதான கட்சிகள்
Published on

பாலமேடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 9 மையங்களில் நடைபெறுகிறது. இதில், பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 2 மையங்களில் எண்ணப்பட்டது.

இந்நிலையில் பாலமேடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 7 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று 8 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 7 சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு திமுக வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வருடம் தோறும் தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பாலமேடு பேரூராட்சியில் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பாலமேட்டில் வழிவழியாக கட்சி சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிட்டு ஊர் முடிவு செய்பவர்கள் மட்டுமே சேர்மனாக கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com