மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பத்மப்ரியா, இளைஞர்களுடன் பேட்மின்டன் விளையாடியபடி பரப்புரையில் ஈடுபட்டார்.
தேர்தல் காலத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் ஆட்டோ பயணம், தேநீர் கடை என வித்தியாச ஐடியாக்கள் பிடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா பேட்மின்டன் விளையாடியபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இளைஞர்கள் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்த அவர் விளையாடியதோடு, வாக்களிப்பின் அவசியம் குறித்தும் பேசியதற்கு 'தம்ஸ் அப்' காட்டியிருக்கிறார்கள் அங்கிருந்த இளைஞர்கள்.
இ.ஐ.ஏ (EIA) எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் பத்மபிரியா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்தே கமல்ஹாசனை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து இன்று வேட்பாளராகவும் மாறியிருக்கிறார்.
காலை நடைபயிற்சி தொடங்கி இரவு வரை தன் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், 'வெற்றி வசப்படும்' என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்.