'ரகசியத்தை வெளியிட தோல்வி பயமே காரணம்' : ப.சிதம்பரம் விமர்சனம்

'ரகசியத்தை வெளியிட தோல்வி பயமே காரணம்' : ப.சிதம்பரம் விமர்சனம்
'ரகசியத்தை வெளியிட தோல்வி பயமே காரணம்' : ப.சிதம்பரம் விமர்சனம்
Published on

தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே விண்வெளியில் தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றது தொடர்பான ரகசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றியது பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி, விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள், பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்னவென கேள்வியுள்ள அவர், தேர்தல் தோல்வி பயத்தாலே அதனை பாஜக அரசு வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளதாகவும், விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இச்சாதனை முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய, இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com