ஆளில்லா லெவல் கிராசிங்கில் 13 குழந்தைகள் இறந்த நிலையில் புல்லட் ரயிலுக்கு 77 ஹெக்டேர் வனத்தை ஒதுக்குவதா என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் உயிர்ப்பலி வாங்கிய அதே நாளில் புல்லட் ரயிலுக்கு வனப்பகுதியை ஒதுக்கி உத்தரவிட்ட பாஜக அரசின் அறிவிப்பு அதன் முன்னுரிமையை காட்டுவதாக சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளர்.
’ரூ 1,08,000 கோடி புல்லட் ரயிலுக்காக, 170 ஏக்கர் வனத்தை அழிக்க அனுமதி. அதே நாள் காவலர் இல்லாத ரயில்வே கேட்டில் வேன் மீது ரயில் மோதி 13 பள்ளி மாணவர் மரணம். பாஜாக அரசுக்கு எது முக்கியம் என்று தெரிகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம்,
’99% இந்தியர்கள் புல்லட் ரயிலில் செல்லப்போவதில்லை’ என்றும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
’ரூ 1,08,000 கோடி இருந்தால் ரயில் துறையில் எவ்வளவு முன்னேற்றங்களைச் செய்ய முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள். அவ்வளவு கோடி இருந்தால் எல்லா ரயில் கேட்டிலும் காவலர் போட முடியுமே!’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு பாதை அமைக்க 77 ஹெக்டேர் நிலப்பகுதியை ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன