தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
Published on

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர் தேர்தல் பறக்கும் படையினர். ஆனால், அவர்களிடம் சிக்குவது என்னவோ பெரும்பாலும் சாமானியர்கள்தான். தேர்தல் நேரத்தில் பணத்தை கொண்டு செல்ல சாமானியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பணத்தை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்?

> ரூ.49 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக பணம் எடுத்து செல்ல உரிய ஆவணம் கட்டாயம்

> உரிய ஆவணங்களை காட்டி கருவூலத்திலிருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

> மருத்துவத் தேவைகளுக்காக பணம் எடுத்துச் சென்றால் மருத்துவரின் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

> கல்வி கட்டணம் செலுத்த சொல்வோர் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்

> ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து செல்பவர்கள், ஏடிஎம் இயந்திலிருந்து பெறப்படும் சீட்டை உடன் வைத்திருக்க வேண்டும்

> கடனாக பெற்று கொண்டு செல்லும் பணம் சிக்கினால், கடன் கொடுத்தவரிடம் உரிய ஆவணத்தை பெற்று பணத்தை மீட்கலாம்

> வீட்டு சேமிப்பு ரொக்க பணத்தை தேர்தல் நேரத்தில் அவசியமிருந்தால் மட்டுமே எடுத்து செல்ல அறிவுறுத்தல்

தேர்தல் நேரம் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தனிநபர் ஒருவர், 49 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக பணம் எடுத்து செல்ல வேண்டுமானால், அதற்கான ஆவணங்களையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்கிறது வருமான வரித்துறை சட்டம். அதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் இதனை பறக்கும் படை தீவிரமாக கண்காணிக்கிறது.

ஆவணமின்றி தனிநபர் ஒருவர் 50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லும் பணத்தை கைப்பற்றும் தேர்தல் அதிகாரிகள், அதனை அரசின் கருவூலத்திற்கு அனுப்புகின்றனர். அதன்பிறகு பணத்தின் உரிமையாளர் உரிய ஆவணங்களை காட்டி கருவூலத்திலிருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், வீட்டு சேமிப்பில் இருக்கும் ரொக்க பணத்தை பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் அவசியமிருந்தால் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com