‘50% வாக்கு சாவடிகளில் ஒப்புகை சீட்டை கணக்கிட வேண்டும்’ - உச்சநீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் ?

‘50% வாக்கு சாவடிகளில் ஒப்புகை சீட்டை கணக்கிட வேண்டும்’ - உச்சநீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் ?
‘50% வாக்கு சாவடிகளில் ஒப்புகை சீட்டை கணக்கிட வேண்டும்’ - உச்சநீதிமன்றத்தை நாடும் எதிர்க்கட்சிகள் ?
Published on

நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீத வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு எண்ணிக்கையுடன் வாக்கு ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை நாட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இந்நிலையில், 21 எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, 50 சதவீத வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு எண்ணிக்கையுடன் வாக்கு ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை நாட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. . கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் சிக்கல்களை தேர்தல் ஆணையம் முக்கியமான பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர். 

வாக்கு ஒப்புகை சீட்டு முறை மூலம் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கு குறித்து தெரிந்துகொள்ளலாம். அதாவது வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தப்பிறகு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவிபேட்டில் வாக்கின் விவரம் தெரியும். அதில் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது சின்னம் ஆகிய இரண்டும் 7 விநாடிகளுக்கு விவிபட் திறையில் தெரியும். அதன்பின்பு இந்தத் தகவல் வாக்கு ஒப்புகை சீட்டாக அச்சிட்டு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இந்த ஒப்புகை சீட்டு உள்ள பெட்டியை தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே திறக்கமுடியும்.

வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு தொகுதியில் 5 வாக்குச் சாவடிகளை தேர்வு செய்து அதில் உள்ள வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 50 சதவீதம் வாக்கு சாவடியில் பதிவாகியுள்ள வாக்கு ஒப்புகை சீட்டுகளை மின்னுணு வாக்கு எண்ணிக்கையும் கூடவே எண்ண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com