தேர்தலை நிறுத்த எதிர்க்கட்சிகள் சதி : தம்பித்துரை

தேர்தலை நிறுத்த எதிர்க்கட்சிகள் சதி : தம்பித்துரை
தேர்தலை நிறுத்த எதிர்க்கட்சிகள் சதி : தம்பித்துரை
Published on

தேர்தலை நிறுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்து வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

ஆர்,கே.நகர் தொகுதிக்கு,  தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் பத்ரா நேற்று சென்னை வந்தார். இன்று காலை முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கலந்துக் கொண்டார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை தேர்தலை நிறுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 

மேலும், அதிமுக வேட்டியைக் கட்டிக்கொண்டு வாக்காளர்களுக்கு சிலர் பணம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். அதே போல் தேர்தல் பயத்தால் எதிர்க்கட்சிகள் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்றும், தேர்தலை நடத்த வேண்டுமென்று கூறியவர்கள் தற்போது அதை நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் தம்பித்துரை தெரிவித்தார். வேஷம் போட்டுக்கொண்டு தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டிய நிலையில் அதிமுக இல்லை என்றும் அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com