இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல்,இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்ன வழக்கில் தேர்தல் ஆணையம் நேற்று வழங்கிய தீர்ப்பு விவரமும் கேவியட் மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. சின்னத்திற்கு உரிமை கோரிய வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஈபிஎஸ், ஒபிஎஸ் அணியினருக்கு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.