ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை கோயம்பேட்டிற்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வழக்கத்தை விட கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, வெங்காய வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரத்து குறைவால் இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என வியபாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல, மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.