மாநில அரசு எப்படி இயங்க வேண்டும் என்று யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீ்ர்செல்வம் பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழக சட்டசபை பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் போது பேசிய பன்னீர்செல்வம், மாநில அரசு எப்படி இயங்க வேண்டும் என யாரும் பாடம் நடத்த வேண்டாம் என்று கூறினார். அத்துடன் திமுகவினருக்கு வரலாற்றை மாற்றிப் பேசுவதே வழக்கம் என்றும், பொய் கூறுவதில் திமுகவினரும், மு.க.ஸ்டாலினும் கைதேர்ந்தவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். ஒருநாளும் தமிழர்களின் உரிமைகளுக்காக திமுக வாதாடவும் இல்லை, போராடவும் இல்லை என்றும் அவர் குறை கூறினார்.