திமுக வழங்கிய பொங்கல் தொகுப்பை யாராலும் மறக்க முடியாது - இபிஎஸ் விமர்சனம்

திமுக வழங்கிய பொங்கல் தொகுப்பை யாராலும் மறக்க முடியாது - இபிஎஸ் விமர்சனம்
திமுக வழங்கிய பொங்கல் தொகுப்பை யாராலும் மறக்க முடியாது - இபிஎஸ் விமர்சனம்
Published on

திமுக வழங்கிய பொங்கல் பரிசை யாராலும் மறக்க முடியாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி விமர்சனம் செய்தார்.

சேலத்தில் பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூர் பேரூராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது...

திமுகவினர் அதிமுகவினரை மிரட்டி அச்சுறுத்தும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுவதன் மூலம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்றனர். அரசியல் ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக இருந்தனர்.

அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக பனமரத்துப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்படுகிறது. திமுகவில் தொண்டர்கள் முதல் தலைவர் வரை பொய்யை மூலதனமாக கொண்டுள்ளனர். மக்களை ஏமாற்றுவதில் முதன்மையான கட்சியாக திமுக திகழ்கிறது.

இந்தியாவில் யாருக்கும் உதிக்காத திட்டம்தான் நகைக்கடன் தள்ளுபடி திட்டம். தி.மு.க ஆட்சியில் மக்கள் என்ன பலனை கண்டனர்? என்று கேள்வி எழுப்பிய அவர், சொன்ன அனைத்தையும் செயல்படுத்தியது அ.தி.மு.க அரசுதான் என்றார். ரூ 8.15 கோடியில் 79 திட்டப்பணிகளை மல்லூர் பேரூராட்சியில் அ.தி.மு.க அரசு நிறைவேற்றியதாகவும் அவர குறிப்பிட்டார்.

யாராலும் மறக்க முடியாத பொங்கல் தொகுப்பை கொடுத்தது தி.மு.க அரசு என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே திமுக பொங்கல் தொகுப்பை வழங்கியதாக குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com