“ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை” - டெல்லி காங். அறிவிப்பு

“ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை” - டெல்லி காங். அறிவிப்பு
“ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை” - டெல்லி காங். அறிவிப்பு
Published on

வருகின்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஷீலா தீட்ஷித் அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை இருந்து வந்தது. அதனால், டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று முன் தினம் ஆம் ஆத்மி அறிவித்தது. 

இதனையடுத்து, டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்ஷித், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். 

மக்களவைத் தேர்தலையொட்டி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த எதிர்க்கட்சிகள் முகாமில் சமீப காலமாகதான் கெஜ்ரிவால் பங்கெடுத்து வந்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆத் ஆத்மி கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. 

இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தையும் நடைபெற்று வந்தது. மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸுக்கு தலா 3 இடங்களில் போட்டியிடுவது என்றும் ஒரு தொகுதிகளில் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், எதுவும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இதனையடுத்து, கூட்டணிக்கு காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்பதை டெல்லி காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com