தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம், சுதந்திரம் மேலும் செறிவூட்டப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-க்கு புதிய கம்பீரம் கிடைத்துள்ளதாகக் கூறினார். அரசாலோ, அல்லது வேறு வகையிலோ குடிமக்களின் சுதந்திரத்தை பறித்து விட முடியாது என்பது உறுதியாகி இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தனி நபர் ரகசியம் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை மனமார வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பின் மூலம் குடிமக்களின் சுதந்திரத்தை எந்தவொரு அரசாலும் பறிக்க முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.