இந்த வயசுல இப்படியொரு எனர்ஜியா? யார் இந்த மெக்சிகோவின் Granny Jordan?

இந்த வயசுல இப்படியொரு எனர்ஜியா? யார் இந்த மெக்சிகோவின் Granny Jordan?
இந்த வயசுல இப்படியொரு எனர்ஜியா? யார் இந்த மெக்சிகோவின் Granny Jordan?
Published on

45-50 வயதில் இருப்பவர்களே 60, 70 வயதில் வரக்கூடிய நோய்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் ஒருவரது துணையில்லாமல் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால், முதிய பெண் ஒருவர் அற்புதமாக கூடைப்பந்து விளையாடிய வீடியோ ஒன்று இணையவாசிகளால் கவரப்பட்டு வருகிறது.

மெக்சிகோவைச் சேர்ந்த 71 வயதான ஆண்ட்ரியா கார்சியா லோபஸ் என்ற பெண்மணிதான் ஓக்ஸாக்காவின் சான் எஸ்டெபன் அட்டாட்லாஹுகா நகரில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானதை அடுத்து, லோபஸ் "Granny Jordan" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். கூடைப்பந்து விளையாடும் மூதாட்டி லோபஸின் வீடியோவை அவரது பேரன் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

எதிர்தரப்பு அணியினரை லோபஸ் சுலபமாக சமாளித்து கூடைக்குள் பந்தை வீசுவது அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. தலைமுடியை பிண்ணிக்கொண்டு, நீளமான ஸ்கர்ட் அணிந்து எதிர்தரப்பு அணியினரை அலறவிடும் அளவுக்கு லோபஸ் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எண்ணளவு மட்டுமே வயதில் மூப்படைந்திருக்கும் லோபஸ், தன்னுடைய ஆற்றலை வெறும் 20 வயதுடையவரை போலவே வைத்திருக்கிறார். பாட்டியின் கூடப்பந்தாட்டத்தை கண்ட இணையவாசிகள், “இவங்கதான் உண்மையான சூப்பர் ஸ்டார்” என பாராட்டி வருகின்றனர்.

எந்த சஞ்சலமும், சலிப்பும் இல்லாமல் அசாத்தியமாக கூடைப்பந்தை வீசி விளையாடும் ஆண்ட்ரியா கார்சியா லோபஸ் உண்மையில் ஒரு நெசவு தொழிலாளியாவார். லேசான முழங்கால் வலி இருந்தும் சில காலம் தொடர்ந்து கூடைப்பந்து விளையாட அவர் ஆசைப்படுவதாகவும் லோபஸ் கூறியிருக்கிறார்.

உண்மையான திறமைசாலிகள் வெளியுலகுக்கு தெரியவர சமூக வலைதளங்கள் காரணமாக இருப்பது நல்லவையாக இருந்தாலும், ஒரு சிலர் அதனை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துவதால் அவற்றின் மீதான பொதுபுத்தியும் தவறாகவே போய் முடிகிறது.

ஆகவே சமூக வலைதளங்களை திறமைகளை வெளிப்படுத்தவும், அதன் மூலம் இலக்குகளை அடையவுமே பயன்படுத்துவதே சாலச்சிறந்ததாக அமையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com