சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: ஸ்டாலின்
Published on

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்திருப்பது சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதையே உணர்த்துவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்தனர். இதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்திருப்பது சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதையே உணர்த்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “இந்த குதிரை பேர ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்-ஒழுங்கும் மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றுள்ளது வருத்தம் அளிக்கிறது. கந்துவட்டி கொடுமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com