நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதாகவும், தமிழகத்திற்கு இதில் விலக்கு அளிப்பதும், அளிக்காததும் மத்திய அரசின் கையில் இருப்பதாகவும் கூறினார். ஆனால் அதிமுக சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.