ரஜினி குறித்த கட்டுரை.. முரசொலி விளக்கம்

ரஜினி குறித்த கட்டுரை.. முரசொலி விளக்கம்
ரஜினி குறித்த கட்டுரை.. முரசொலி விளக்கம்
Published on

நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளியான கட்டுரை பற்றி முரசொலி நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 23-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் எனக் கூறியிருந்தார். 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது என்று தெரிவித்த ரஜினிகாந்த், கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்றும் எச்சரித்திருந்தார்.

ரஜினியின் இந்த அறிக்கை குறித்து அவரும், அவரது ரசிகரும் உரையாடுவது போன்ற கட்டுரை ஒன்று கடந்த 26-ஆம் தேதி முரசொலி நாளிதழில் வெளியானது. ரஜினியின் அறிக்கை தொடர்பாக அவரது ரசிகர் பல்வேறு கேள்விகளை எழுப்புவது போன்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது. ரஜினி மட்டும் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படலாம், அவரது ரசிகர்கள் ஆசைப்படக் கூடாதா என முரசொலி நாளிதழ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தது. கட்டுரை வெளியான அன்றே அதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ரஜினி, தன்னையும் தனது ரசிகர்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் முரசொலியில் வெளியான கட்டுரை குறித்து அதன் ஆசிரியர் விளக்கமளித்துள்ளார். இன்றைய முரசொலி நாளிதழில் வெளியாகியிருக்கும் அந்த விளக்கத்தில் ரஜினி குறித்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவது போல் உள்ளதென்று தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும், இனி அத்தகைய செய்திகளை வெளியிடும் போது கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com