“சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை” - கே.பி.முனுசாமி

“சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை” - கே.பி.முனுசாமி
“சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை” - கே.பி.முனுசாமி
Published on

மக்கள் பிரச்னைக்கு ரஜினி, கமல் குரல் கொடுத்துள்ளார்களா என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.பி. முனுசாமி “கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு 82 கல்லூரிகளை கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரியில் வரும் 4ம் தேதி மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைக்கின்றனர்.

மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் முன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால் இவ்வளவு பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கடந்த 70 ஆண்டுகளில் இந்தச் சமூகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்களா? பிரச்னைகளை தீர்க்க போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்களா?

அரசியலுக்கு வருவதற்கு ஒழுக்கம் மிக முக்கியம். அந்த ஒழுக்கம் இவர்களுக்கு உள்ளதா? திரைத்துறையில் அனுபவித்து விட்டு வயதான காலத்தில் தற்போது அரசியலுக்கு வருகின்றனர். இவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் எந்தப் பயனும் இல்லை” எனத் தெரிவித்தார்

மேலும், “மக்கள் உணர்வு, தேவைகளை தெரிந்து கொள்கை அமைத்து மக்களிடம் சென்று வென்றால் தான் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் சிந்தனை வரும். ஸ்டாலின் வியாபாரம் செய்யும் கார்பரேட் கம்பெனிகளை அழைத்தால் மக்களிடம் ஈர்ப்பு இருக்காது.

அதிமுகவை வெல்ல முடியாததால் விரக்தியின் விளிம்பில் சென்ற ஸ்டாலினுக்கு தன்னம்பிக்கை போய்விட்டது. சட்டத்தின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வரும் வாய்ப்பு சசிகலாவுக்கு குறைவு. சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் சேர்க்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை” எனக் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com