தமிழகத்தில் மாநில சுயாட்சி விதி மீறல் நடைபெறவில்ல என ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியின் எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த செயல் மாநில சுயாட்சியில் தலையிடும் வகையில் அமைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதில் தங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என ஆளும் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து மத்திய அரசிடம் தமிழக மாநில சுயாட்சியை விட்டுக்கொடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி வைத்திலிங்கம், தமிழகத்தில் மாநில சுயாட்சி விதி மீறலே தற்போது நடைபெறவில்லை என்று கூறினார். அத்துடன் தமிழகத்தில் அனைவருக்கும் என்ன உரிமை உள்ளதோ அதன்படியே அனைத்து செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.