சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சாலையை சீர்செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்ல கூடிய சாலையில் மாமண்டூரில் இருந்து புக்கத்துறை கூட்டு சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சாலை பராமரிப்புக்காக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியும் இந்த பள்ளங்கள் சரிசெய்யாமல் கிடக்கின்றன. இதில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.


மேலும் இப்போது மழை காலம் என்பதால் மழைநீர் அந்த பள்ளத்தில் தேங்கினால் பள்ளம் பெரிய பள்ளமாகி பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த சாலையில் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் ஒரு விபத்து ஏற்பட்டால் தொடர்ச்சியாக பல விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்தும் சாலையை சீரமைக்க வில்லை. பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com