ஜெயலலிதா மரணம் குறித்து எந்த நீதிபதி விசாரிக்கப் போகிறார் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை என்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என்று கேட்டார். தற்போது இபிஎஸ் உடன் இணைந்து, துணை முதல்வர் பதவி வாங்கிக் கொண்டார். ஆனால் இதுவரைக்கும், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்களே தவிர, யார் விசாரிக்கப் போகிறார்கள், எந்த நீதிபதி விசாரிக்கப் போகிறார் என்பது குறித்து தெளிவான எந்த அறிவிப்பும் இல்லை என்று கூறினார்.