அரசின் வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: கமல் அறிக்கை எதிரொலி!

அரசின் வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: கமல் அறிக்கை எதிரொலி!
அரசின் வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: கமல் அறிக்கை எதிரொலி!
Published on

ஊழல் புகார் கொடுக்கும்படி கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் திடீரென நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் குறித்த ஆதாரங்களை வெளியிடுமாறு இரு தினங்களுக்கு முன் கமல் வெளியிட்ட இணையதள முகவரி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். அதில் சென்று பார்த்த பலரும், அதில் எந்த தொடர்பு விவரங்களும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்” என்று கூறிய கமல்ஹாசன், http://www.tn.gov.in/ministerslist என்ற இணையதள முகவரியையும் வெளியிட்டார். ஆனால் தற்போது, அமைச்சர்களின் விவரங்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com