ஜெயலலிதா இறந்தது முன்கூட்டியே தெரியும்: ராஜேந்திர பாலாஜி பேச்சு

ஜெயலலிதா இறந்தது முன்கூட்டியே தெரியும்: ராஜேந்திர பாலாஜி பேச்சு
ஜெயலலிதா இறந்தது முன்கூட்டியே தெரியும்: ராஜேந்திர பாலாஜி பேச்சு
Published on

ஜெயலலிதா அறிவியல் ரீதியாக இறந்து விட்டது தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் திடீரென, அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியைத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இதனையடுத்து, மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசும்போது, ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் எழுந்ததை அடுத்து, “மெடிக்கல் மரணம், பயாலஜிகல் மரணம் என்ற இரண்டு உள்ளது. மெடிக்கல் மரணத்தை தான் குறிப்பிட்டேன்” என்று திவாகரன் விளக்கம் அளித்தேன்.

இந்நிலையில், திவகாரனை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,  ஜெயலலிதா இறப்பு குறித்த செய்தி தனக்கு டிசம்பர் 4ம் தேதி மாலை 5.20 மணிக்கு தகவல் தெரிய வந்தது  என்று கூறினார்.

அவர் பேசுகையில், “அம்மாவோட மறைவு யாரும் எதிர்பாராதது. இன்னும் 15 ஆண்டுகள் இருப்பார்கள் என்று எல்லோரும் நம்பினோம். செப்டம்பர் 20 பேர் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அப்போது அவரது உடல் நலம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இரண்டு நாட்களில் எல்லாம் மாறிவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு குணமடைந்து வந்துவிடுவார் என்று நம்பினோம். ஆனால், இறப்பு செய்திதான் கடைசியில் வந்து. டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சீரியஸாக உள்ளதாக தகவல் வந்தது. விரைந்து சென்னை புறப்பட்டு சென்றபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சென்னை வருமாறு இரவு 2 மணிக்கு அழைப்பு வந்தது. அப்பொழுதே உறுதி செய்துவிட்டேன். பின்னர் 5-ம் தேதி இரவு 11 மணிக்குதான் ஜெயலலிதா மறைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவியல் ரீதியாக அவர் ஏற்கனவே இறந்து கொண்டிருந்தது தெரிந்துவிட்டது” என்றார். 

ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு திவாகரன் பேசியதை உறுதி செய்யும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com