எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
Published on

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதேபோல் முதலமைச்சரை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ பத்திரிகையாளர்களுக்கு எத்தனை சிரமங்கள் இருக்கிறது என்பதை நான் அறிவேன். இயற்கை பேரிடர் சமயங்களில் நாட்டு மக்களுக்கு தகவலை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்தை மறந்து தியாக மனப்பான்மையோடு பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஜனநாயகத்தின் 4-வது தூண் என்று அவர்களை அழைக்கிறோம். அப்படிப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் உள்பட எந்த பத்திரிகையாளரையும் எஸ்.வி.சேகர் இழிவுபடுத்துதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.

பத்திரிகையாளர்கள் போலீசில் புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் ஒரு சைபர் சைக்கோ என்றால் மற்றொரு சைபர் சைக்கோ ஹெச்.ராஜா. இந்த இரு சைபர் சைக்கோகளும் தமிழ்நாட்டிற்கே கேடு. அதேபோல் முதலமைச்சரை விமர்சித்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும். எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா ஆகியோர் தொடர்ச்சியாக இழிவாக பேசிவருவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com