“புயலுக்கு கரண்டாகவும், கொரோனாவிற்கு மருந்தாகவும் ஓடிவந்து உதவினேன்” - விஜயபாஸ்கர்

“புயலுக்கு கரண்டாகவும், கொரோனாவிற்கு மருந்தாகவும் ஓடிவந்து உதவினேன்” - விஜயபாஸ்கர்
“புயலுக்கு கரண்டாகவும், கொரோனாவிற்கு மருந்தாகவும் ஓடிவந்து உதவினேன்” - விஜயபாஸ்கர்
Published on

‘கஜா புயலுக்கு கரண்டாகவும், கொரோனாவிற்கு மருந்தாகவும் ஓடிவந்து உதவிக்கரம் நீட்டியவன் நான், என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை விராலிமலை தொகுதிக்காக உழைப்பேன்’ என்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். பிரச்சாரத்தின் போது ஒரு ஆண் குழந்தைக்கு விஜயபாஸ்கர் என்றும் அவர் பெயர் வைத்தார்.

விராலிமலை தொகுதிக்குட்பட்ட பேராம்பூர், செங்களக்குடி, ஆவூர், புதுப்பட்டி, ஆம்பூர் நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் விஜயபாஸ்கர் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விராலிமலை தொகுதிக்கு உழைத்துள்ளேன்.

பல்வேறு மகத்தான திட்டங்களை கொண்டு வந்திருப்பது இந்த மண்ணுக்கும் இங்குள்ள பெண்களுக்கும் தெரியும். பல்வேறு இக்கட்டான காலகட்டத்தில்தான் உழைத்தேன். அது இந்த பூமிக்கும் அந்த சாமிக்கும் தெரியும். உயிருள்ளவரை இந்த விராலிமலை தொகுதிக்காக உழைப்பேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com