இண்டெர்நெட்டால் நொந்துப்போனவருக்கு 20 கோடி நிதி: USA-ன் பிரச்னையை தீர்த்த மிச்சிகன் மேன்!

இண்டெர்நெட்டால் நொந்துப்போனவருக்கு 20 கோடி நிதி: USA-ன் பிரச்னையை தீர்த்த மிச்சிகன் மேன்!
இண்டெர்நெட்டால் நொந்துப்போனவருக்கு 20 கோடி நிதி: USA-ன் பிரச்னையை தீர்த்த மிச்சிகன் மேன்!
Published on

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்ட போது உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்தது. ஏனெனில் ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்த படியே வேலை பார்ப்பது ஆகியவற்றின் காரணமாக இணையத்தின் தேவை அத்தியாவசியமானது.

அதனால் DTH-ஐ போல வீட்டுக்கொரு இணைய சேவை பயன்பாடும் அதிகரித்தன. ஆனால் தேவை அதிகமாக இருந்ததால் ஒரு சில இணைய சேவைகளின் வேகமும் போதுமானதாக இருக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சற்று அதிருப்தியை தெரிவிப்பதும் நடந்தது.

இப்படியான தொந்தரவுகளை சந்தித்த அமெரிக்காவைச் சேர்ந்த நெட்வொர்க் இன்ஜினியரான ஜாரட் மெளச் என்பவர் சொந்தமாக ஒரு நெட்வொர்க் சேவையை ஏற்படுத்தி அதன் மூலம் 20 கோடி ரூபாயும் பெற்றிருக்கிறார்.

மிச்சிகனின் Washtenaw County பகுதியைச் சேர்ந்தவர் ஜாரட் மெளச். இவரது வீட்டில் ஹை ஸ்பீட் ஃபைபர் இண்டெர்நெட் கணக்‌ஷென் கொடுத்திருந்தார். ஆனால் அந்த இணைய சேவை ஜாரத்திற்கு எந்த வகையிலும் உபயோகமாக இருக்கவில்லை. ஏதேனும் பில் கட்ட வேண்டும் என்றாலும் கூட 1.5 Mbps கூட கிடைக்கவில்லையாம்.

இதனால் கடுமையான அதிருப்திக்கு ஆளானவர், வேறு இண்டெர்நெட் சேவைதாரரை அணுகியிருக்கிறார். அவர்களோ, உங்கள் கிராமத்திற்கு இணைய சேவை வழங்க வேண்டும் என்றால் அதற்கு 50,000 டாலர் செலவாகும் (40 லட்சம் ரூபாய்) என்றிருக்கிறார்கள்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜாரட், 10,000 டாலர் என்றால் கூட பரிசீலித்திருக்கலாம், ஆனால் எனக்கு எதுவும் பலனே கிடைக்காததற்கு எதற்கு 50,000 டாலர் கட்ட வேண்டும் என யோசித்தவர் சொந்தமாக ஒரு நெட்வொர்க் சேவையை தொடங்க எண்ணியிருக்கிறார்.

அதன்படி Washtenaw Fibre Properties LLC புதிய நெட்வொர்க் சேவையை தொடங்கினார் ஜாரட். இவரது இந்த இணைய சேவையில் முதலில் அவரது கிராமத்தை சுற்றிய 70 வாடிக்கையாளர்கள் இணைந்தனர்.

2021ம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. ஜாரட்டின் இண்டெர்நெட் சேவைக்கு கட்டணமாக 55 டாலர் (Rs 4,379) முதல் 75 டாலரே (Rs 6,290) வசூலிக்கிறாராம். இந்த சேவை 100 Mbps முதல் 1Gbps வரை ஹை ஸ்பீடு கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வல்லரசு நாடக இருக்கும் அமெரிக்காவின் இண்டெர்நெட் சேவையால் அந்நாட்டு மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், அதனை போக்கும் விதமாக ஜாரட்டின் புதிய இண்டெர்நெட் சேவை இருந்திருக்கிறது.

அந்த வகையில், கொரோனா வைரஸுக்கான மாநில மற்றும் உள்ளூர் நிதி மீட்பு நிதிகளின் ஒரு பகுதியாக, 71 மில்லியன் டாலரை அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. அதில் குறிப்பிட்டளவு தொகை பிராட்பேண்ட் சேவைக்கும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இண்டெர்நெட் சேவை விரிவுபடுத்தல் தொடர்பான ஏலத்தை ஜாரட்டின் Washtenaw Fibre Properties LLC வென்றதோடு 2.6 மில்லியன் டாலர் (20 கோடியே 70 லட்சம் ரூபாய்) தொகையையும் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்னைக்கு ஜாரட்டின் சேவை தீர்வை கொடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com