ஆட்சிக்கு வரும் முன்பே தண்ணீர் பிரச்னையை தீர்த்தவர் எம்ஜிஆர்: முதலமைச்சர் எடப்பாடி பேச்சு

ஆட்சிக்கு வரும் முன்பே தண்ணீர் பிரச்னையை தீர்த்தவர் எம்ஜிஆர்: முதலமைச்சர் எடப்பாடி பேச்சு
ஆட்சிக்கு வரும் முன்பே தண்ணீர் பிரச்னையை தீர்த்தவர் எம்ஜிஆர்: முதலமைச்சர் எடப்பாடி பேச்சு
Published on

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை எம்ஜிஆர் தீர்த்து வைத்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவண்ணாமலையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வந்த எம்ஜிஆரின் காரை விவசாயிகள் மறித்தனர். கடந்த மூன்றாடுகளாக சரியான விளைச்சல் இல்லை. நெல்விளையும் பூமியில் உங்கள் பொன்னான கால்பட்டால் பொன்விளையும் பூமியாக மாறும் விவசாயிகள் அன்போடு வலியுறுத்தினர். அதற்குள் கையில் ஒருவர் மண்சட்டியுடன் ஓடிவந்தார். அவர் எம்ஜிஆரிடன், நீங்கள் அவ்வளவு தூரம் நடந்துவந்து சிரமப்பட வேண்டாம். இந்த மண்சட்டியில் உள்ள மண்ணை நீங்கள் மிதித்துக் கொடுத்தால் போதும் என்று கூறினார். அந்த மண்ணை எங்கள் நிலத்தில் தூவிக்கொள்கிறோம் என்று கூறினார்கள். அந்த விவசாயிகள் அன்பைக் கண்டு வியந்துபோன எம்ஜிஆர், அவர்களின் கோரிக்கையை ஏற்று மண்சட்டியில் காலை வைத்து மிதித்துக் கொடுத்தார்கள். அதற்குக் கைமாறாகத் தான் ஆட்சிக்கு வந்த பின்னர், விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்றினார். காவிரி நீர் பிரச்னையை எம்ஜிஆர் எப்படி கையாண்டார் என்பதை அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடந்த 2012 ஜனவரி 16ல் எழுதிய கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை எம்ஜிஆர் தீர்த்து வைத்தார். 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வற்றிய ஏரி, குளங்களை அவர் பார்வையிட்டார். அதற்குக் காரணம் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாதது தான் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். உடனடியாக கர்நாடக மாநிலத்தின் அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சரைத் தொடர்புகொண்ட எம்ஜிஆர், அவரது வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவதாகத் தெரிவித்தார். பலமுறை விருந்துக்கு அழைத்தும் வராத எம்ஜிஆர், தானாக விருந்துக்கு வருவதாகக் கூறியதும் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனந்தமடைந்தார். மறுநாள் விருந்தில் பங்கேற்றார் எம்ஜிஆர். விருந்துக்கு சென்ற எம்ஜிஆரை, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சரும், அவருடைய தாயாரும் அன்புடன் உபசரித்தனர். விருந்து தொடங்கியவுடன் எம்ஜிஆருக்கு, விக்கல் வருகிறது. எம்ஜிஆருக்கு விக்கல் வருவதைப் பார்த்த அமைச்சரின் தாயார், அவருக்கு விக்கல் வருகிறது தண்ணீர் தரக்கூடாத என்று தன் மகனைப் பார்த்து கேட்கிறார். உடனே எம்ஜிஆர், ’உங்கள் மகன் எங்கே தண்ணீர் தருகிறார்’ என்று தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தராததையும், தமிழ்நாட்டில் பயிர்கள் வாடிவருவதையும் சூசகமாகத் தெரிவித்தார். இதனால், எம்ஜிஆர் வருகையின் காரணத்தைப் புரிந்துகொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர், இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். எம்ஜிஆர் கேட்கும் உடனடியாக செய்து கொடுங்கள் என்று கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டார். எம்ஜிஆர், தமிழகத்துக்கு வருவதற்கு முன்னரே காவிரி நீர் இங்கு வந்து சேர்ந்தது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com